நமது இந்தியாவின் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி ஆற்றல் மிக்கது.! - பாரத் பயோ டெக் நிறுவனம்

0 2914
நமது இந்தியாவின் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி ஆற்றல் மிக்கது, திறம்பட செயலாற்றுகிறது - பாரத் பயோ டெக் நிறுவனம்

ந்தியாவின் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி, இங்கிலாந்து புதிய கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு எதிராக திறம்பட செயலாற்றுவதாக, பாரத் பயோ டெக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இங்கிலாந்தில் பரவிய புதுவகை கொரோனா வைரஸ், சீன வைரசைக் காட்டிலும், அதிக பரவுதல் வேகம் கொண்டது. இந்த இங்கிலாந்து கொரோனா வைரசின், ஸ்பைக்ஸ் ஜீன், நோயெதிர்ப்புத் திறனில் இருந்து மறைந்து கொள்ளும் தன்மையுடையதாக உள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனம், நமது இந்தியாவின் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி, இங்கிலாந்தின் புதுவகை வைரசையும் தடுக்கும் திறனோடு, அதன் தப்பிக்கும் ஸ்பைக்ஸ் ஜீனை முழுமையாக கட்டுப்படுத்தும் ஆற்றல் பெற்றிருப்பதாக, தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments