பெல்காம் யாருக்கு என்னும் வழக்கில் தீர்ப்பளிக்கும் வரை அதை ஒன்றிய ஆட்சிப் பகுதியாக அறிவிக்க உத்தவ் தாக்கரே கோரிக்கை
பெல்காம் யாருக்கு என்னும் வழக்கில் தீர்ப்பளிக்கும் வரை அதை ஒன்றிய ஆட்சிப் பகுதியாக அறிவிக்கும்படி உச்சநீதிமன்றத்தை அணுகப்போவதாக மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இருமாநிலங்களிடையான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. பெல்காமை இரண்டாம் தலைநகராக அறிவித்த கர்நாடக அரசு, அங்குச் சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடரை நடத்தி வருவதுடன் பெயரையும் பெலகாவி என மாற்றியுள்ளது.
இந்நிலையில் எல்லைத் தகராறு தொடர்பாக மகாராஷ்டிர அரசு சார்பில் நூலை வெளியிட்டுப் பேசிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, பெல்காமை ஒன்றிய ஆட்சிப்பகுதியாக அறிவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தை அணுக உள்ளதாகத் தெரிவித்தார்.
Comments