இலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிடக் கோரி பிரதமர் நரேந்திரமோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
ஐ.நா மனித உரிமை கவுன்சிலில், இலங்கை அரசு மீதான போர்க்குற்ற விசாரணையைத் துரிதப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில், தமது தலைமையில் நடைபெற்ற திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பாக, ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் பிரச்சனை எழுகின்ற நேரத்தில்கூட, மத்திய அரசு, இலங்கைக்கு எதிராக கருத்து கூறாமல், மெளனம் சாதிப்பதாக, மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
எனவே, இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு, அழுத்தம் கொடுக்க அறிவுறுத்த வேண்டும் என்றும், பிரதமரை, மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
Comments