சசிகலா கொரோனா சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்துதல் முடிந்து, பிப்.3ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு திரும்புவார் எனத் தகவல்

0 2767
சசிகலா கொரோனா சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்துதல் முடிந்து, பிப்.3ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு திரும்புவார் எனத் தகவல்

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையான வி.கே.சசிகலா, கொரோனா சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்துதல் முடிந்து, வருகிற 3ஆம் தேதி, தமிழ்நாட்டிற்கு திரும்புவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பாதிப்பால், பெங்களூர் அரசு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் சசிகலாவிற்கு, தொற்று பாதிப்பு நன்றாக குறைந்திருப்பதுடன், சர்க்கரை நோய் அளவும், இரத்த அழுத்த அளவும் குறைந்து, உடல்நிலை சீராக உள்ளதாக, மருத்துவ வட்டாரங்கள் கூறியுள்ளன.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா தரப்பு வழக்கறிஞர் இராஜா செந்தூர்பாண்டியன், விடுதலை பெற்றாலும், விக்டோரியா மருத்துவமனையிலேயே, சசிகலா தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்படுவார் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments