ஜெயலலிதா எப்படி வாழ்ந்தார் என்பதை மக்களுக்கு காட்டவும், அவரது நினைவை பாதுகாக்கவும் தான் வேதா நினைவகம்- தமிழக அரசு
ஜெயலலிதா எப்படி வாழ்ந்தார் என்பதை மக்களுக்கு காட்டவும், அவரது நினைவை பாதுகாக்கவும் தான் வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்படுகிறதே தவிர, வணிக பயன்பாட்டுக்காக அல்ல என்று தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
போயஸ்தோட்ட இல்லத்தை கையகப்படுத்திய உத்தரவை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கும், இழப்பீடு வழங்கிய உத்தரவை எதிர்த்து அண்ணன் மகள் தீபாவும் தாக்கல் செய்த வழக்குகள், நீதிபதி சேஷசாயி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒரு வேளை கையகப்படுத்திய உத்தரவு ரத்து செய்யப்பட்டால் என்ன செய்வீர்கள்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
தற்போதைய நிலையில் நிலத்தின் உரிமையாளர் அரசு தான் என்றும், அரசின் வசம் தான் வேதா நிலையம் இல்லம் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இடைக்கால உத்தரவுக்காக பிற்பகலுக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.
Comments