சிட்னி டெஸ்டில் இந்திய வீரர்களை அநாகரிகமாக பேசிய ரசிகர்களை அடையாளம் காண முடியவில்லை - ஆஸ்திரேலியா
சிட்னி கிரிக்கெட் டெஸ்டின்போது இந்திய வீரர்களை இனவெறியுடன் திட்டியவர்களை அடையாளம் காண முடியவில்லை என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் பும்ராவையும், சிராஜ்ஜையும் ரசிகர்கள் சிலர் இனவெறியுடன் திட்டியதாக புகார் எழுந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக ஐசிசியிடம் ஆஸ்திரேலிய வாரியம் அளித்த அறிக்கையில், சிட்னி டெஸ்டில் இந்திய வீரர்களை இனவெறி ரீதியாக திட்டிய ரசிகர்களை அடையாளம் காண முடியவில்லை என்றும், அன்றைய தினம் மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட 6 பேர் இனவெறியுடன் திட்டியவர்கள் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
Comments