லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் 5 கிலோ தங்கம் திருடு போன வழக்கு, கொள்ளையனை பிடிக்க ராஜஸ்தான் விரைந்தது தனிப்படை
சென்னையில், லலிதா ஜுவல்லரியில் 5 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கொள்ளையனை பிடிக்க தனிப்படை போலீசார் ராஜஸ்தான் விரைந்துள்ளனர்.
சென்னை தியாகராய நகரில் உள்ள லலிதா ஜூவல்லரி கார்ப்பரேட் அலுவலகத்தில் நேற்று 5 கிலோ தங்கம் திருடு போனது.
கடையில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்ததில், அங்கு 7 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த பிரேம் குமார் சிங் என்பவன் தங்கத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில், தனிப்படை அமைத்து விசாரித்து வந்த தேனாம்பேட்டை போலீசார், தற்போது கொள்ளையனை பிடிக்க அவனது சொந்த மாநிலமான ராஜஸ்தான் சென்றுள்ளனர்.
Comments