காபூலில் பெண்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களை கடந்து ஹிப் ஹாப் நடனத்தில் இளம்பெண் அசத்தல்
ஆப்கானிஸ்தானில் ஹிப் ஹாப் நடனத்தில் இளம் பெண் ஒருவர் அசத்தி வருகிறார்.
காபூல் நகரில் 11ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி தலாஷ், நடனத்தின் மீது கொண்ட தீராத வேட்கை காரணமாக அச்சுறுத்தல்களை தாண்டி நடனப் பயிற்சி செய்து வருகிறார்.
நாட்டில் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் மற்றும் பெண்களுக்கு எண்ணற்ற கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், இதையெல்லாம் தகர்க்கும் வண்ணம் நடனப் பயிற்சி செய்வதாக தலாஷ் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், பாரீஸில் நடைபெறும் 2024ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் பிரேக் டான்ஸிங்கில் தடம் பதிப்பதே தனது லட்சியம் என தெரிவித்துள்ளார்.
Comments