சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து விடுதலை ஆனார் சசிகலா
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருந்த சசிகலாவின் 4 ஆண்டு கால சிறை தண்டனை நிறைவடைந்ததை அடுத்து அவர் இன்று விடுதலை செய்யப்பட்டார்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த குற்றத்திற்காக கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ம் தேதி முதல் சிறையில் இருந்த அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு விக்டோரினா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், விடுதலை ஆவணங்களுடன் மருத்துவமனைக்கு சென்ற சிறைத்துறை அதிகாரிகள் சசிக்கலாவிடம் கையொப்பம் பெற்று அவரது விடுதலையை உறுதி செய்தனர். இதனை அடுத்து பிப்ரவரி 3ம் தேதி அண்ணா நினைவு நாளில் அவர் சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.
Comments