காற்றுமாசினால் கருச்சிதைவு ஏற்படுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கன்றன

0 1123

தெற்காசியாவில் காற்று மாசினால் கருச்சிதைவு ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

காற்று மாசினால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை. வேளாண்மை, தொழிற்சாலை கழிவுகள், போக்குவரத்து வாகனங்களால் ஏற்படும் புகை போன்றவற்றால் காற்று மாசடைகிறது. இதனால் காற்றில் PM 2.5 துகள்கள் உருவாகின்றன. இந்த துகள்கள் மிக சிறிய அளவில் இருப்பதால், மனிதன் சுவாசிக்கும்போது உடல் பகுதிக்குள் சென்று நுரையீரல் பகுதியை தாக்கும். இதனால் பல்வேறு உடல் பிரச்சனைகள் உருவாகக்கூடும். இந்த காற்று மாசு, கருவில் இருக்கும் குழந்தையை கூட விட்டுவைப்பதில்லை. காற்று மாசினால் கருவில் இருக்கும் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது.

லண்டனை தலைமையிடமாக கொண்ட " தி லான்செட் பிளானட்டரி ஹெல்த்" என்ற ஆங்கில பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, தெற்காசியாவில் காற்றுமாசினால் அதிக அளவு கருச்சிதைவு ஏற்படுவதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெற்காசியாவில் ஏற்படும் 15ல் 1 கருச்சிதைவு காற்றுமாசினால் ஏற்படுகிறது என்றும் அந்த ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன. குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் காற்றின் தரம் மிக குறைவாக உள்ளதால், கருச்சிதைவு அதிக அளவில் ஏற்படுவதாக ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கன்றன.

இந்தியா,பாகிஸ்தான் மற்றும் வாங்கதேசம் ஆகிய நாடுகளில் 1998 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை சேகரிக்கப்பட்ட தகவல்களின் படி, கிட்டத்தட்ட 350,000 கருச்சிதைவுக்கு காரணம் காற்று மாசு என்று ஆய்வுகள் கூறுகின்றன.

இதில் அதிர்ச்சி தரும் விஷயம் என்னவென்றால், கிராமங்களில் கூட காற்று மாசால் கருச்சிதைவு ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பொதுவாக கிராமங்கள் என்றால் சுத்தமான காற்று , அமைதியான சூழல் என்று அனைவரும் நினைப்பது இயல்பு தான். ஆனால் கிராமப்பகுதிகளில் செய்யப்படும் பாரம்பரிய சமையலுக்கு பயன்படுத்தப்படும் கரி, மண்ணெண்ணெய் மற்றும் பயிர் எச்சம் ஆகியவை காற்றை மாசுப்படுத்துவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments