2 கோடி ஆண்டுகளுக்குப் பிறகும் உயிர்த்திருக்கும் அதிசய மரம்
மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள எரிமலைகள் நிறைந்த லெஸ்போஸ் தீவில் ஒரு புராதன மரத்தை கிரேக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த மரம் 2 கோடி ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாக இருப்பினும் அதன் வேர்கள் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதைக் கண்டு விஞ்ஞானிகள் வியக்கின்றனர்.
சாலைப்பணிகளுக்காக பழைமை வாய்ந்த வனப்பகுதியில் மரங்கள் வெட்டப்பட்ட போது இந்த அதிசய மரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் கிளைகளும் வேர்களும் வலிமையுடன் இருப்பதைக் கண்டு மீண்டும் இடத்தில் அதனை வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த வனப்பகுதி உலகத் தொல்பொருள் பாதுகாப்பு அமைப்பான யுனெஸ்கோவால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளது. ஆனால் எரிமலை வெடித்ததால் அப்பகுதி முழுவதும் இந்த மரம் உள்பட சாம்பல் பூத்து காணப்பட்டது.
Comments