கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற புதிய படகு கண்டுபிடிப்பு
கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை எடுத்து மறுசுழற்சி செய்யும் புதிய படகினை பிரான்சைச் சேர்ந்தவர் கண்டுபிடித்துள்ளார்.
தி சீ கிளீனர்ஸ் என்று குழுவைச் சேர்ந்த யுவான் போர்கனான் என்பவர் பிளாஸ்டிக் பொருட்களால் கடலில் மாசு ஏற்படுவதைக் கண்டு அதனை அகற்ற தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவரது குழுவினர், போட்டிகளில் பயன்படுத்தப்படும் பாய்மரப் படகில் சற்று மாற்றம் செய்து கடலில் மிதக்கும் கழிவுகளை எடுத்து தரம் பிரிக்கின்றனர்.
பின்னர் அதிலிருந்து கிடைத்த பிளாஸ்டிக் கழிவுகளை மறு சுழற்சி மூலம் மின்சாரமாக மாற்றி அதன் மூலம் தங்கள் படகினை செலுத்துவதற்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்தக் கப்பலை 2024ம் ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளாக யுவான் தெரிவித்துள்ளார்.
Comments