ஏரவாடா சிறையில் சுற்றுலாவுக்கு மகாராஷ்ட்ரா அரசு அனுமதி
வரலாற்று சிறப்பு மிக்க புனேயின் ஏரவாடா சிறைச்சாலையை பொதுமக்கள் பார்வையிட மகாராஷ்ட்ரா அரசு சிறை சுற்றுலா திட்டத்தை தொடங்கியுள்ளது.
முதலமைச்சர் உத்தவ் தாக்கரே காணொலி வாயிலாக சிறை சுற்றுலாவைத் தொடங்கி வைத்தார்.அப்போது துணை முதலமைச்சர் அஜித் பவார் சிறைச்சாலையில் இருந்தபடி விழாவில் பங்கேற்றார்.
முதல்நாளில் ஏராளமான மாணவர்கள் சிறைச்சாலையைக் காண அழைத்து வரப்பட்டனர். கசாப் தூக்கிலிடப்பட்ட இடம், நடிகர் சஞ்சய் தத் சிறைத்தண்டனை அனுபவித்த இடம் என பல்வேறு முக்கிய சம்பவங்களின் சாட்சியமாக புனேயின் சிறைச்சாலை விளங்குகிறது
Comments