ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்படுவதையொட்டி, சென்னையில் போக்குவரத்து மாற்றம்..!

0 4762

ஜெயலலிதா நினைவிடம் இன்று திறக்கப்படுவதையொட்டி, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களில் அதிமுகவினர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், சென்னை மெரினா காமராஜர் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு வாகனங்கள் செல்ல மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுளள்ளது.  

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, சென்னை காமராஜர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தை, இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க இருக்கிறார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 5 ஆயிரத்தற்கும் மேற்பட்ட வாகனங்களில் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒஎம்ஆர், இசிஆர் சாலை வழியாக வரும் அதிமுகவினரின் வாகனங்கள் கலங்கரை விளக்கம் வரை அனுமதிக்கப்பட்டு, அதன் பிறகு வலதுபக்கம் திரும்பி சீனிவாசபுரம் கடற்கரையையொட்டிய உட்புறச் சாலை மைதானம் மற்றும் மெரினா உற்புறச் சாலையில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர் உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களில் இருந்து வரும் கட்சி தொண்டர்களின் நேப்பியர் பாலம் வரை அனுமதிக்கப்பட்டு, பின்னர் தீவுத்திடலில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூடுதல் வாகனங்கள் வந்தால் அருகிலுள்ள கல்லூரி மைதானங்களைப் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

காமராஜர் சாலையில் வார் மெமோரியலில் இருந்து கண்ணகி சிலை வரை காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை வாகனங்கள் அனுமதிக்கப்படாது என்று அரசு அறிவித்துள்ளது. அடையாறு பகுதியில் இருந்து காமராஜர் சாலையில் பிராட்வே நோக்கி செல்லும் சரக்கு, வணிக வாகனங்கள் கிரின்வேஸ் சாலை சந்திப்பில் இருந்து ஆர்கே மடம் சாலை, லஸ் சந்திப்பு, ராயப்பேட்டை மணிக்கூண்டு, அண்ணசாலை வழியாக பிராட்வேயை சென்றடையலாம்.

அடையாறு பகுதியில் இருந்து வரும் மாநகர பேருந்துகள் உள்ளிட்ட பிற வாகனங்கள் கச்சேரி சாலை சந்திப்பில் திருப்பப்பட்டு லஸ் சந்திப்பு, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, அண்ணாசாலை வழியாக பிராட்வே செல்லலாம். பாரிமுனையில் இருந்து அடையாறு நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் திருப்பி விடப்பட்டு ராஜா அண்ணாமலை மன்றம் வழியாக அண்ணாசாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ஆர்.கே.மட் ரோடு வழியாக அடையாறு செல்லலாம்.

வாலாஜா சாலை, மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில், உழைப்பாளர் சிலை நோக்கி வரும் வாகனங்கள் அனைத்தும் திருவல்லிக்கேணி ஹைரோடு வழியாக திருப்பி விடப்படும்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் காந்தி சிலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் நடேசன் சந்திப்பில் இருந்து காரணீஸ்வரர் கோயில் சந்திப்பு வழியாக திருப்பி விடப்படும்.

போக்குவரத்து மாற்றத்திற்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு வழங்க அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அலுவலகம் மற்றும் பிற வேலைகளுக்காக இந்த வழித்தடங்களில் செல்ல இருப்பவர்கள் அரை மணி நேரம் முன்னதாகவே புறப்பட்டு சென்றால் தாமதமின்றி குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல முடியும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments