ஜெயலலிதா நினைவிடம் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை திறந்து வைக்கிறார்

0 8341

சென்னை மெரினா கடற்கரையில், எம்ஜிஆர் நினைவகத்தில், பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம், நாளை புதன்கிழமை திறக்கப்படுகிறது.

ஜெயலலிதா நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காலை 11 மணியளவில் திறந்து வைக்க இருக்கிறார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்க இருக்கிறார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக தொண்டர்கள் பெருமளவில் திரள்வார்கள் என்பதால், மெரினா காமராஜர் சாலையில், காலை 6 மணி முதல், நிகழ்ச்சி முடிவடைந்து, தொண்டர்கள் கலைந்து செல்லும் வரையில், போக்குவரத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments