விடுதலை பத்திரங்களில் நாளை காலை சசிகலாவிடம் கையொப்பம் பெறப்படுகிறது - சிறைத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0 4430

பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவிடம் நாளை காலை 10.30 மணிக்கு விடுதலை பத்திரங்களில் கையொப்பம் பெறவுள்ளதாக பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலாவின் தண்டனை காலம் நாளையுடன் நிறைவடைகிறது. கொரானா தொற்று ஏற்பட்டு பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவிடம் விடுதலை தொடர்பான பத்திரங்களில் கையெழுத்து பெற்றபின் போடப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அங்கேயே சிகிச்சையை தொடர்வதா அல்லது தனியார் மருத்துவமனைக்குச் செல்வதா என்பதை சசிகலா தரப்பே முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments