செயற்கை முறை கருத்தரிப்பில் பிறந்த சிங்கக்குட்டிக்கு பாட்டிலில் பாலூட்டும் பராமரிப்பாளர்கள்
சிங்கப்பூரில் உள்ள விலங்கியல் பூங்காவில் சிங்கக்குட்டிக்கு பராமரிப்பாளர்கள் பாட்டிலில் பாலூட்டும் காட்சி பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த அக்டோபரில் செயற்கை முறை கருத்தரிப்பில் பிறந்த சிங்கக்குட்டியை பூங்கா பராமரிப்பாளர்கள் கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வருகின்றனர்.
பிறந்து 3 மாதங்களே ஆகியுள்ள சிங்கக்குட்டியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், எப்போதும் சுறுசுறுப்பாக விளையாடி வருவதாகவும் பராமரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments