அமெரிக்க அரசிடம் உள்ள வாகனங்களை எலக்ட்ரிக் வாகனங்களாக மாற்ற திட்டம் - ஜோ பைடன்
அமெரிக்க அரசிடம் உள்ள சுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் வாகனங்கள், மின்சார வாகனங்களாக மாற்றப்படும் என்று அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவிக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில், அமெரிக்க மக்களுக்காக தயாரித்த எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் எவ்வளவு நாட்களில் இந்த வாகனங்கள் மாற்றப்படும் என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. இதற்கு தோராயமாக இந்திய மதிப்பில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments