மருந்துக் கடைகளின் ஷட்டரை இரவு நேரங்களில் உடைத்து, மருந்தை திருடி போதைக்கு பயன்படுத்தியவர் கைது

0 2017
சென்னையில் இரவு நேரங்களில் மருந்துகடைகளின் ஷட்டரை உடைத்து சர்க்கைரை நோய்க்கு பயன்படுத்தும் மருந்தை திருடி போதைக்காக பயன்படுத்தியதோடு, விற்பனையிலும் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னையில் இரவு நேரங்களில் மருந்துகடைகளின் ஷட்டரை உடைத்து சர்க்கைரை நோய்க்கு பயன்படுத்தும் மருந்தை திருடி போதைக்காக பயன்படுத்தியதோடு, விற்பனையிலும் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

மேற்கு சைதாப்பேட்டை, ஜாபர்கான்பேட்டை பகுதிகளில் உள்ள மருந்துகங்களில் தொடர்ந்து இரவு நேரங்களில் திருடு போவதாக புகார் வந்தது. சிசிடிவி கேமரா அமைக்கப்படாத மருந்தகங்களை குறிவைத்து திருடியதால் துப்பு துலக்குவதில் சிக்கல் நீடித்தது.

பின்னர் சாலைகள், தெருக்களில் அமைக்கப்பட்டிருந்த சுமார் 40 சிசிடிவிக்களை ஆய்வு செய்த போது திருட்டில் ஈடுபட்ட நபர் பழைய குற்றவாளி அருண்குமார் என்பதால் போலீசார் எளிதில் அடையாளம் கண்டனர்.

சர்க்கரை நோய்க்கு பயன்படுத்தும் மாத்திரைகளை திருடி சிரஞ்சு மூலம் போதைக்கு பயன்படுத்தியதோடு, தனது நண்பர்களுக்கும் ஒரு டோஸ் 600 ரூபாய் என அருண்குமார் விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments