முத்தூட், கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் நகைகளுடன் தமிழகம் அழைத்துவரப்பட்டனர்
ஓசூர் முத்தூட் பைனான்ஸ் நிறுவன கொள்ளையில் ஈடுபட்ட 7 பேரும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளுடன் ஓசூர் அழைத்துவரப்பட்டனர்.
கடந்த 22ஆம் தேதி முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்துக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் 7 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டன.
வடமாநிலம் தப்பிச் சென்ற கொள்ளையர்களை தமிழக போலீசார் கொடுத்த தகவலின் பேரில் தெலுங்கானா போலீசார் கைது செய்து நகைகள் அனைத்தையும் மீட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நகைகள் மற்றும் ஆயுதங்களுடன் ஓசூர் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
நகைகளை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட கண்டெய்னர் லாரிகளும் ஒசூர் கொண்டுவரப்பட்டுள்ளன. விரைவில் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, விசாரணைக்காக காவலில் எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
Comments