கன்னட நடிகை ஜெயஸ்ரீ ராமையா சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை

0 7312

கன்னட நடிகை ஜெயஸ்ரீ ராமையா, சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமடைந்த நடிகை ஜெயஸ்ரீ ராமையா, மன அழுத்தம் காரணமாக பெங்களூருவில் உள்ள மறு வாழ்வு மையத்தில் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்த நிலையில், திங்கட் கிழமை, மறுவாழ்வு மையத்தின் அறையில் நடிகை ஜெயஸ்ரீ தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டார்.

அவரது திடீர் மறைவு கன்னட ரசிகர்கள், திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில் தன்னுடைய வாழ்வை முடித்துக் கொள்ள விரும்புவதாக பேஸ்புக்கில் பதிவிட்டதை குறிப்பிட்டு, மன அழுத்தத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments