கொரோனா தொற்று நீங்கி சசிகலா வேகமாக குணமடைந்து வருகிறார் -மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

0 2816

கொரோனா தொற்று நீங்கி சசிகலா வேகமாக குணமடைந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பில், சசிகலாவுக்கு 2 நாட்களாக ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்திருந்ததாகவும், அதற்கு ஏற்றார்போல் இன்சுலின் வழங்கப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பலனாக, சர்க்கரை அளவு 258 லிருந்து 178 ஆக குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ரத்தத்தில் இருக்கும் ஆக்சிஜன் அளவும் சசிகலாவுக்கு சீராக இருப்பதால், மிகக்குறைந்த அளவிலான செயற்கை சுவாசம் மட்டும் கொடுக்கப்பட்டு வருவதாகவும், சசிகலா தானாக உணவு உட்கொண்டு, உதவியுடன் எழுந்து நடப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள சசிகலாவை சிறப்பு மருத்துவர் குழு 24 மணி நேரமும் கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments