9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க 98 சதவீத பெற்றோர் ஆதரவு - அமைச்சர் செங்கோட்டையன்

0 52475
9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பதற்கு 98 சதவீத பெற்றோர் ஆதரவளித்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.

 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பதற்கு 98 சதவீத பெற்றோர் ஆதரவளித்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை திருவல்லிக்கேனியில், சாரண சாரணியர் தலைமையகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்த செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்களில் மாற்றம் கொண்டு வருவது குறித்து, கருத்துகேட்புக்கு பின்னர் முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனக் கூறினார்.

சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு பொதுத் தேர்வு நடத்தப்படுமா என்பது, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரே முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments