மும்பை புறநகர் மின்சார ரயில்களில் விரைவில் பொதுமக்களுக்கு அனுமதியளிக்கப்படும் -உத்தவ் தாக்கரே

0 1461

மும்பையின் புறநகர் மின்சார ரயில்களில் விரைவில் பொதுமக்கள் அனைவருக்கும் அனுமதியளிக்கப்படும் என்று மகாராஷ்ட்ரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், அதிகமான கூட்ட நெரிசல் இல்லாத வகையில் கொரோனா முன்னெச்சரிக்கையுடன் பொதுமக்கள் அனைவரையும் அனுமதிப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ரயில்களில் பொதுமக்களை அனுமதிப்பது தொடர்பாக அவர் ஆலோசனை நடத்தினார். தற்போது அத்தியாவசியப் பணியாளர்களும் குறிப்பிட்ட நேரங்களில் பெண்களும் மட்டுமே புறநகர் ரயில்களில் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments