ராணுவம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து: ராகுல் காந்தி மன்னிப்பு கோர வலியுறுத்தல்..!
எல்லையில் ராணுவம் தேவையில்லை என்று பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு ராணுவ உயதிகாரிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மூத்த அதிகாரிகள் 20 பேர் விடுத்த கூட்டறிக்கையில் எல்லையில் கடும் பனியிலும் குளிரிலும் உயிரை துச்சமாக மதித்து நாட்டைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் வீரர்களை ராகுல் காந்தி கொச்சைப்படுத்துவதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது கருத்துக்காக ராகுல் காந்தி ராணுவ வீரர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் ராணுவ வீரர்கள் தங்களது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.
Comments