சென்னையில் ஜெயலலிதா சிலையை 28 ஆம் தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர்
சென்னை உயர்கல்வி மன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 28ந் தேதி திறந்து வைக்க உள்ளார்.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் வருகிற 27-ந் தேதி திறக்கப்பட இருக்கிறது. அதேபோல், அதற்கு மறுநாள் 28-ந் தேதி ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லமும் மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட உள்ளது.
இந்தநிலையில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள உயர்கல்வி மன்ற வளாகத்துக்கு ‘ஜெயலலிதா வளாகம்' என்று பெயர் சூட்டப்படும் நிகழ்வும், அங்கு ஜெயலலிதாவின் முழு உருவச்சிலை திறப்பு விழாவும், வருகிற 28-ந் தேதி நடக்கிறது. முழு உருவச்சிலையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைக்க உள்ளார்.
Comments