8 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிக்க மத்திய அரசு திட்டம்;
சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் 8 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான போக்குவரத்து வாகனங்களுக்கு பசுமை வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பான முன்மொழிவுக்கு, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்காரி ஒப்புதல் அளித்துள்ளார்.
அதன்படி 8 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய போக்குவரத்து வாகனங்களுக்கு, தகுதிச் சான்று புதுப்பிக்கும் போது, சாலைவரியில் 10 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை பசுமை வரி விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன், இந்த முன்மொழிவு மாநில அரசுகளின் கருத்துகளை அறிவதற்காக அனுப்பப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments