லடாக் எல்லைக்குள் சீன நாட்டினர் தொடர்ந்து ஊடுருவதாக அங்குள்ள மக்கள் புகார்
லடாக் எல்லைக்குள் சீன நாட்டினர் தொடர்ந்து ஊடுருவதாக அங்குள்ள மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
லடாக்கின் டெம்சோக் பிராந்தியத்தில் உள்ள கோயுல் கிராத்தின் தலைவரான உர்கெய்ன் சீவாங், இதுகுறித்து இந்தோ, திபேத் எல்லை பாதுகாப்பு படையிடம் புகார் கொடுத்துள்ளார். குளிர் கால மேய்ச்சலுக்காக கால்நடைகளை கிராம மக்கள் எல்லை கோட்டுக்கு அருகே உள்ள இந்திய பகுதிக்கு கடந்த மாதம் 10 ஆம் தேதி ஒட்டிச் சென்றனர்.
அப்போது அங்கு இரு கார்களில் வந்த சீனர்கள், மேய்ப்பவர்கள் அங்கிருந்து செல்லுமாறு அச்சுறுத்தினர். இதுகுறித்த புகாரை அடுத்து இந்திய ராணுவத்தினர் அங்கு முகாமிட்டனர். இந்நிலையில் கடந்த மாதம் 16 ஆம் தேதி சீனர்கள் 9 பேர் ஒரு காரில் மீண்டும் அதே இடத்திற்குள் ஊடுருவினர்.
அவர்களை இந்திய படையினரும், கிராம மக்களும் இணைந்து துரத்தி அடித்தனர். இதே போல சீன நாட்டினர் அடிக்கடி இந்திய எல்லைக்குள் ஊடுருவுவதாக கிராம மக்கள் கூறியுள்ளனர்.
Comments