தமிழகத்தில் இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது - அமைச்சர் ஜெயக்குமார்

0 1694

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மொழிப்போர்த் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வள்ளலார் நகர் மணிக்கூண்டு முதல் மூலக்கொத்தளம் வரை மௌன ஊர்வலம் நடைபெற்றது. இதைத் தொடக்கி வைத்தபின் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழகத்தில் இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்தார்.

அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில் திமுக நேரடியாகப் போட்டியிட உள்ளதாகத் தகவல் வந்துள்ளதே எனக் கேட்டதற்கு நீந்தத் தெரிந்த தங்களுக்கு ஆழம் பற்றிக் கவலையில்லை என ஜெயக்குமார் பதிலளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments