புதிய வாக்காளர்களுக்கு விரைவு அஞ்சலில் வாக்காளர் அட்டை அனுப்பப்படும் - சத்யப்பிரதா சாகு
புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டைகள் விரைவுஅஞ்சலில் அனுப்பி வைக்கப்படும் எனத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தேசிய வாக்காளர் நாளையொட்டிச் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு வாக்காளர் அடையாள அட்டை வழங்குவதற்கான தானியங்கி எந்திரத்தின் சேவையைத் தொடங்கி வைத்தார்.
அதன்பின் பேசிய தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாகு, வாக்காளர் அட்டையைத் தொலைத்தவர்கள், தேர்தல் ஆணைய இணையத்தளத்தில் மின்னணு வாக்காளர் அடையாள அட்டையைப் பதிவிறக்கம் செய்து அதன் QR கோடைத் தானியங்கி இயந்திரத்தில் காட்டிப் புதிய வாக்காளர் அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.
Comments