மொசாம்பிக்கில் வீசிய கடும் புயலால் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் - மக்கள் அவதி
கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் வீசிய கடும் புயலால் ஆயிரக்கணக்கானோர் வீடுகள் சேதமடைந்து அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மொசாம்பிக் நாட்டை எலாய்ஸ் என்ற புயல் அண்மையில் தாக்கிய நிலையில், கனமழையும் கொட்டித் தீர்த்தது.
புயல் மற்றும் கனமழையால் 17 பள்ளிகள், 11 மருத்துவமனைகள் மற்றும் ஒரு லட்சத்து 36 ஆயிரம் ஹெக்டேர் பரப்பிலான பயிர்கள் சேதமடைந்துள்ளது.
இதனையடுத்து, நாட்டின் பல்வேறு பகுதிகளும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கும் நிலையில், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாவும், மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாவும் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Comments