அந்தமானில் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவை இணைந்து கூட்டுப் போர் ஒத்திகை

0 1224
அந்தமானில் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவை இணைந்து கூட்டுப் போர் ஒத்திகை

ந்தமான் தீவில் இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவை இணைந்து கூட்டுப் போர் ஒத்திகையை நடத்தியுள்ளன.

அந்தமான் கடல், வங்கக் கடல் பகுதியில் நடைபெற்ற இந்தப் போர்ப்பயிற்சியில் அந்தமான் படைத் தொகுதி, கடற்படையின் கிழக்குப் பிரிவு, ராணுவத்தின் தென்மண்டலப் பிரிவு ஆகியவற்றைச் சேர்ந்த வீரர்கள் படைக்கலன்களுடன் பங்கேற்றனர்.

கடலோரக் காவல்படையும் இந்தப் பயிற்சியில் இணைந்துகொண்டது.

முப்படைகளும் எந்தச் சூழலிலும் தயார் நிலையில் இருப்பதை உறுதிப்படுத்துவதும், இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியாவுக்கு உள்ள நலனைக் காப்பதும் இந்தப் போர் ஒத்திகையின் நோக்கம் எனக் கூறப்படுகிறது.

ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள், கடற்படையின் ஜலஸ்வா, ஐராவத், குல்தர் கப்பல்கள் ஆகியன இந்த ஒத்திகையில் ஈடுபடுத்தப்பட்டன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments