நிதி நிறுவன ஊழியர்கள் கொடுத்த நெருக்கடி; சொந்த ஆட்டோவுக்கு தீ வைத்த ஓட்டுநர்!

0 6023
ஆட்டோவுக்கு தீ வைத்து விட்டு நடந்து செல்லும் பிரவீன்குமார்

நிதி நிறுவன ஊழியர்கள் கொடுத்த நெருக்கடி காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலில் சொந்த ஆட்டோவுக்கு, ஓட்டுநரே தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தெலங்கானா மாநிலம் வாரங்கல்லில் பிரவீன்குமார் என்பவர் வசித்து வருகிறார். ஆட்டோ ஓடடுநரான இவர் கடந்த 2019ஆண்டு தனியார் பைனான்ஸ் நிறுவனம் ஒன்றில் கடன் பெற்று தவணைமுறையில் ஆட்டோ ஒன்றை வாங்கி வாடகைக்கு ஓட்டி வருகிறார். சில நாட்களாக நிதி நிறுவன ஊழியர்கள் ஆட்டோ ஓட்டுனர் பிரவீன் குமாருக்கு பணம் கட்டுவது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. நிதி நிறுவன ஊழியர்கள் பிரவீன்குமாரை திட்டி வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால், பிரவீன்குமார் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

பைனான்ஸ் நிறுவனதினரின் தொல்லை தாங்க முடியாத பிரவீன்குமார் வாரங்கல் மாவட்டம் காவல் நிலையம் முன்பு நடுரோட்டில் தன் ஆட்டோவின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டார். பின்னர், காவல் நிலையத்தில் ஆட்டோ உரிமையாளர் வங்கி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரவீன் குமார் புகார் ஒன்றை அளித்துள்ளார் .இது குறித்து வாரங்கல் மாவட்ட காவல்துறை விசாரித்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments