ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள் மற்றும் செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உற்பத்தி செய்யும் பணி தீவிரம்
ஹாங்காங்கில், மனிதர்களை போல முக பாவனைகள் மற்றும் செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்களை உற்பத்தி செய்யும் பணி தீவிரமாகியுள்ளது.
ஹாங்காங்கில் ஹன்சன் ரோபோடிக்ஸ் என்ற நிறுவனம் பெண் போன்ற வடிவமைப்புள்ள ரோபோவை உருவாக்கி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
இதனையடுத்து கொரோனா காலத்தில் மக்களின் உணர்ச்சி மற்றும் முக பாவணைகளை புரிந்து அதை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் ரோபோக்களில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி அசத்தியுள்ளது.
மேலும் இந்தாண்டு இறுதிக்குள் இதுபோன்று ஆயிரம் ரோபோக்களை தயாரித்து சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
Comments