'எய்ட்ஸ் நோயாளி என்பதால் பரிதாபப்பட்டு காதலித்தேன்'- போலீஸாரை அதிர வைத்த சிறுமியின் வாக்குமூலம்
எய்ட்ஸ் நோயாளி என்று தெரிந்தே பரிதாபப்பட்டு ஆட்டோ டிரைவரை காதலித்ததாக சிறுமி அளித்த வாக்குமூலத்தால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரன் கோணம் பகுதியை சேர்ந்தவர் ஒருவர் ஆட்டோ ஓட்டி வந்தார். இவர், 11 ஆம் வகுப்பு மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவருக்கு எய்ட்ஸ் நோயும் இருந்துள்ளது. தான் விரைவில் இறந்து விடுவேன் என்று கூறி அந்த பகுதியில் உள்ள சிறுமி ஒருவரின் மனதை கரைத்துள்ளார். இதனால், பரிதாபப்பட்டு சிறுமியும் அவரை காதலித்ததாக சொல்லப்படுகிறது. சிறுமியை அழைத்து கொண்டு அவர் தலைமறைவாகி விட்டார் . தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவரையும் சிறுமியையும் தேடிவந்தனர்.
இந்த நிலையில், உறவினர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்த ஆட்டோ டிரரைவர் மற்றும் சிறுமியை போலீஸார் மீட்டனர். ஆட்டோ டிரைவரை கைது செய்து விசாரித்ததில் அவருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதும் தெரிய வந்தது. அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், சிறுமியிடத்தில் விசாரணை நடத்திய போது, மேலும் ஆட்டோ டிரைவருக்கு எய்ஸ்ட் நோய் இருப்பது தனக்கு தெரியும் என்றும் அவர் மீது பரிதாபபட்டு காதலித்ததாக கூறியுள்ளார். இதையடுத்து, போலீசார் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமணைக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் எய்ட்ஸ் பரிசோதனைக்கும் உட்படுத்தினர்.
தனக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது தெரிந்தும் , ஆட்டோ ஓட்டுநர் சிறுமியின் மனதை கரைத்து காதலிக்க வைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Comments