ஜெயலலிதாவின் நினைவு இல்லமான வேதா நிலையம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 28ம் தேதி திறப்பு

0 2188
ஜெயலலிதாவின் நினைவு இல்லமான வேதா நிலையம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 28ம் தேதி திறப்பு

ஜெயலலிதா வாழ்ந்த இல்லமான வேதா நிலையத்தை, அவரது நினைவில்லமாக வரும் 28ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வசித்த, சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம், நினைவு இல்லமாக மாற்றப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017-ம் ஆண்டு அறிவித்தார்.

அதன் அடிப்படையில் வேதா நிலையம் அரசால் கையகப்படுத்தப்பட்டு நினைவில்லமாக மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், வரும் 28ம் தேதி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா நினைவில்லத்தை திறந்து வைக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments