வடமேற்கு இந்தியாவின் பல பகுதிகளில் இன்று முதல் கடுங்குளிர்க்காற்று வீசம்- வானிலை ஆய்வுத் துறை
வடமேற்கு இந்தியாவின் பல பகுதிகளில் இன்று முதல் கடுங்குளிர்க்காற்று வீசக் கூடும் என வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
டெல்லியில் திங்கள் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 7 புள்ளி 4 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. மேற்காற்றின் தாக்கத்தால் மேற்கு இமயமலையில் ஜம்மு காஷ்மீரில் பரவலான பனிப்பொழிவு உள்ளது.
வடமேற்கு இந்தியாவில் இருந்து வறண்ட குளிர்க்காற்று வடகிழக்கு நோக்கி வீசும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா, சண்டிகர் ஆகிய பகுதிகளில் இன்றுமுதல் புதன் வரையும், மேற்கு உத்தரப்பிரதேசம், மேற்கு மத்தியப் பிரதேசப் பகுதிகளில் அடுத்த இரு நாட்களும் கடுங்குளிர்க் காற்று வீசக் கூடும் என இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
Comments