சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது - பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை அறிக்கை

0 5686
சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது - பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை அறிக்கை

சிகலாவின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளதாக பெங்களூரு மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அவரது சர்க்கரை அளவு 205 ஆக அதிகரித்துள்ள நிலையில் அவருக்கு இன்சுலின் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகலாவின் மூச்சுத்திணறல் பிரச்சனை குறைந்து வருவதாகவும்,கைத்தாங்கலாக அவர் நடப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 

சசிகலாவிற்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில்,தொற்று குறைந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் சசிகலாவின் உடல்நிலையை மருத்துவர்கள் குழு கண்காணித்து வருவதாகவும், அனைத்துவிதமான சிகிச்சைக்கும் அவர் நல்ல ஒத்துழைப்பு தருவதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இதனிடையே சசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments