இந்தியா சீனா 9வது சுற்றுப் பேச்சுவார்த்தை: எல்லையில் சீனப் படைகளை முழுமையாகத் திரும்பப்பெற இந்தியா வலியுறுத்தல்
இந்தியா சீனா ராணுவ உயரதிகாரிகள் இடையே நடைபெற்ற ஒன்பதாம் சுற்றுப் பேச்சுவார்த்தையில் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள சீனப்படைகளை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்று இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
ஜெனரல் பி.ஜி.கே.மேனன் தலைமையிலான இந்தியக் குழுவினர் சீன எல்லை தாண்டி மால்டோ எனுமிடத்தில் சீன ராணுவ அதிகாரிகளை சந்தித்தனர்.
காலை 10 மணிக்குத் தொடங்கிய பேச்சுவார்த்தை இரவு 9 மணிக்கு முடிவு பெற்றது. கடந்த 9 மாதங்களாக எல்லையில் நீடிக்கும் அசாதாரணமான சூழலையும் பதற்றத்தையும் குறைக்க இருநாட்டு ராணுவ உயரதிகாரிகளும் விவாதித்தனர்.
கிழக்கு லடாக்கில் இருந்து அசல் எல்லைக்கோடு பகுதி தொடங்கி படிப்படியாக சீனா படைகளைக் குறைத்துக் கொள்ள ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதற்கான செயல்திட்டம் குறித்து விவாதம் நீண்ட நேரம் நடைபெற்றதாக ராணுவத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments