பீமா கோரேகான் வழக்கு; மூன்று பேரை உடனே விடுதலை செய்ய மத்திய அரசுக்கு ஐநா.மனித உரிமைக் கவுன்சில் கடிதம்
பீமா கோரேகான் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஐ.நா. மனித உரிமை ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
குறைந்தபட்சம் அவர்களை ஜாமீனிலாவது விடுதலை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சிலரில் தெலுங்கானாவின் புரட்சிக் கவிஞர் வராவர ராவும் ஒருவர்.
உடல் நலிவுற்று சிறையில் வாடும் அவருக்கு ஜாமீன் வழங்க மறுக்கப்பட்டுள்ளது. எனவே மனிதாபிமானத்துடன் வராவர ராவ், சுதா பரத்வாஜ், கவுதம் நாவல்கா ஆகியோரை அவர்களின் வயதும் தகுதியும் கருதி விடுதலை செய்யுமாறு ஐநா.மனித உரிமை ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
Comments