நாட்டின் எந்த ஒரு வாக்குச்சாவடியில் இருந்தும் வாக்களிக்கும் திட்டம்; விரைவில் ஒத்திகை என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு
நாட்டின் எந்த ஒரு வாக்குச்சாவடியில் இருந்தும் வாக்காளர் வாக்கு அளிக்கும் remote voting முறையைக் குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்து வருகிறது.
விரைவில் இதற்கான ஒத்திகைகள் தொடங்க இருப்பதாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.தேசிய வாக்காளர் தினத்தையொட்டி பேசிய சுனில் அரோரா தேர்தல் ஆணையத்தின் எதிர்காலத்திட்டங்களை விளக்கினார்.
சென்னை ஐஐடி உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்களின் உதவியுடன் இதற்காக நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொண்ட ஆய்வில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் சுனில் அரோரா கூறினார்.
Comments