அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியது அதிமுக அரசு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

0 2525
அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியது அதிமுக அரசு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

கோவை மாவட்டத்தின் நீண்ட நாள் கனவுத் திட்டமான அத்திக்கடவு -அவிநாசி திட்டத்தை அதிமுக அரசுதான் நிறைவேற்றியுள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

கோவை மாவட்டம் துடியலூர், அன்னூர் உள்ளிட்ட இடங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது பேசிய அவர், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சிக் காலங்களில் செய்யப்பட்ட நலத்திட்டங்கள் இன்றும் மக்களிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்றார்.

சென்னையில் ஏற்பட்ட தண்ணீர் பிரச்சினைக்கு ரயில்கள் மூலம் தண்ணீர் எடுத்து வரப்பட்டு, தீர்வு காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் உயர் கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தின் நீண்ட நாள் கனவு திட்டமான அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதாகக் கூறிய முதலமைச்சர், கோவையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பாலங்கள் கட்டப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments