புதிய தகவல் பரிமாற்ற செயலிகள் மூலம் பாகிஸ்தானில் உள்ள தலைமையுடன் பயங்கரவாதிகள் தகவல்களை பரிமாறிக்கொள்வதாக தகவல்
பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட பயங்கரவாத குழுக்கள், வாட்ஸப் மற்றும் பேஸ்புக் மெசெஞ்சருக்கு மாற்றாக புதிய செயலிகள் மூலம் தகவல்களை பரிமாறிக்கொள்வதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, அங்கு 3G மற்றும் 4G சேவைகள் தடை செய்யப்பட்டு, 2ஜி சேவை மட்டும் வழங்கப்படுகிறது.
இதையடுத்து, குறைந்த வேக Internet-ல் செயல்படக்கூடிய 3 வெளிநாட்டு செயலிகள் மூலம் பாகிஸ்தானில் உள்ள தங்கள் தலைமைக்கு தகவல்களை அளித்து வருவதாக பாதுகாப்பு படைகளால் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த செயலிகளை பயன்படுத்த செல்போன் எண்னோ அல்லது இ-மெய்ல் முகவரியோ தேவை இல்லை என்பதால், அவற்றை உடனடியாக முடக்கும் நடவடிக்கைகளில் பாதுகாப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
Comments