உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு வழங்க இயலாது - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

0 2472
உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமுதாயப் பன்முகத்தன்மையைக் கடைப்பிடிக்க அரசு உறுதிபூண்டிருப்பதாக மத்தியச் சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமுதாயப் பன்முகத்தன்மையைக் கடைப்பிடிக்க அரசு உறுதிபூண்டிருப்பதாக மத்தியச் சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், அரசியலமைப்புச் சட்டப்படி உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு வழங்க இயலாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதனால் சாதி, வகுப்பு வாரியான விவரங்கள் பராமரிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதிகள் நியமனத்தில் சமுதாயப் பன்முகத் தன்மையை உறுதிசெய்யும் வகையில், நீதிபதிகள் பதவிக்குப் பரிந்துரையை அளிக்கும்படி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளைக் கேட்டுக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments