நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சி கண்டுகளித்த பிரதமர் மோடி

0 1724
நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சி கண்டுகளித்த பிரதமர் மோடி

கொரோனா தடுப்பூசி குறித்து மக்களுக்குச் சரியான தகவலைத் தெரிவிக்கவும், வதந்திகளை முறியடிக்கவும் தேசிய மாணவர் படையினரும், நாட்டு நலப்பணித் திட்டத் தன்னார்வலர்களும் முன்வர வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

டெல்லியில் குடியரசு நாள் விழாவில் பங்கேற்கும் தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணித் திட்டத் தன்னார்வலர்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள் ஆகியோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பரத நாட்டியம், கதக்களி, குச்சிப்புடி உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றதைப் பிரதமர் நரேந்திர மோடி கண்டுகளித்தார்.

மல்லர் கம்பம் உள்ளிட்ட சாகச விளையாட்டுக்களையும் நடனக் கலைஞர்கள் செய்துகாட்டினர். இந்த சாகச நிகழ்ச்சிகளைப் பிரதமர் மோடியும் பார்வையாளர்களும் கண்டுகளித்தனர்.

கலைநிகழ்ச்சிகளுக்குப் பின் தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணித் திட்டத் தன்னார்வலர்கள், கலைஞர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். குடியரசு நாள் அணிவகுப்பு, மாபெரும் சமூக பண்பாட்டுப் பாரம்பரியத்துக்குத் தலைவணங்குவதாகத் தெரிவித்தார்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் அரசியலமைப்புக்குக் குடியரசு நாள் அணிவகுப்பு தலைவணங்குவதாகவும் தெரிவித்தார். கொரோனா தடுப்பூசி குறித்த சரியான தகவலைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்கவும், தவறான தகவல்களையும் வதந்திகளையும் முறியடிக்கவும் உதவும்படி கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments