"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
பொறியியல் மாணவர்களுக்கு இணையவழி செமஸ்டர் தேர்வுக்கான வழிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது
பொறியியல் மாணவர்களுக்கு இணையவழி செமஸ்டர் தேர்வுக்கான வழிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
இணையவழியில் நடைபெறும் ஒருமணி நேரத் தேர்வில் மாணவர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இணையவழித் தேர்வில் பங்கேற்க இயலாமல் போனால், நேரடி எழுத்துத் தேர்வு நடத்தப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது.
60 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடத்தப்பட்டு, அது பின் 100 மதிப்பெண்ணுக்கு மாற்றப்படும் என்றும், வாய்மொழித் தேர்வும் இணையத்திலேயே நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இணையவழித் தேர்வு எழுதும் போது, மாணவர்கள் தன்னுடன் வேறு யாரையும் அமர வைக்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது.
Comments