இந்தியா - சீன ராணுவ அதிகாரிகள் ஒன்பதாம் சுற்றுப் பேச்சு
கிழக்கு லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து சீனா தனது படையினரைக் குவித்துள்ளது.
எந்தச் சூழலையும் எதிர்கொள்ளும் வகையில் இந்தியாவும் படைவீரர்களையும் படைக்கலன்களையும் குவித்துள்ளது.
ஜூன் 15ஆம் நாள் நிகழ்ந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேரும், சீன வீரர்கள் 43 பேரும் உயிரிழந்தனர்.
இதையடுத்து எல்லையில் அமைதி நிலவவும் பதற்றத்தைத் தணிக்கவும் இரு நாடுகளிடையே ராணுவ அதிகாரிகள் நிலையில் பல சுற்றுப் பேச்சுக்கள் நடைபெற்றன.
சீனப் படையினர் உள்ள பகுதியான மால்டோவில் இன்று ஒன்பதாம் சுற்றுப் பேச்சு நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் லெப்டினன்ட் ஜெனரல் மேனன், வெளியுறவு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் நவீன் ஸ்ரீவஸ்தவா, இந்தோ திபெத் எல்லைக் காவல் படை ஐஜி தீபம் சேத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது எல்லையில் அமைதி நிலவுவதற்காக படைகளை விலக்கிக்கொள்ளவும், முந்தைய நிலையைப் பராமரிக்கவும் சீனாவிடம் வலியுறுத்தப்பட்டது
Comments