அனைத்து பல்கலைக்கழகங்களிலும் சர்வதேச கல்வி விவகாரங்களுக்கான அலுவலகம் அமைக்க யு.ஜி.சி. உத்தரவு
நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் சர்வதேச கல்வி விவகாரங்களுக்கான அலுவலகம் அமைக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து யு.ஜி.சி செயலர் ரஜ்னிஷ் ஜெயின் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் சர்வதேச கல்வி விவகாரங்களுக்கான அலுவலகம் அமைக்க வேண்டும் என்றும், இந்த அலுவலகம் மூலம் சர்வதேச அளவிலான மாணவர் சேர்க்கையை முறையாக மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
அதேசமயம், பல்கலைக்கழகங்களில் ஏற்கெனவே படித்து வெளிநாடுகளில் வசிப்போரின் உதவிகளை நாடலாம் என்றும், யு.ஜி.சி. தெரிவித்துள்ளது.
Comments