மத்திய பட்ஜெட் தாக்கலையொட்டி நிதி அமைச்சர் முன்னிலையில் அல்வா தயாரிப்பு... பட்ஜெட் தயாரிக்கும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது
2021-22 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1-ந் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதையொட்டி, ஆண்டுதோறும் பட்ஜெட் தொடர்பான புத்தகங்கள் அச்சடிக்கப்படும் முன்பு சம்பிரதாயமாக நடைபெறும் அல்வா கிண்டும் நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடைபெற்றது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் அல்வா கிண்டப்பட்டு பட்ஜெட் தயாரிக்கும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது. மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூர், நிதியமைச்சக உயர்அதிகாரிகள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
கொரோனாவால் இந்த ஆண்டு பட்ஜெட் உரை, பொருளாதார ஆய்வறிக்கை தொடர்பான புத்தகங்கள் அச்சடிக்கப்படவில்லை. காகிதமின்றி டிஜிட்டல் முறையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
Comments