இந்தியா அனுப்பி வைத்த 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் பிரேசிலுக்கு போய்ச் சேர்ந்தன.... ராமாயண கதையை சித்தரிக்கும் படத்துடன் பிரதமர் மோடிக்கு பிரேசில் அதிபர் நன்றி

0 4247
இந்தியா அனுப்பி வைத்த 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் பிரேசிலுக்கு போய்ச் சேர்ந்தன.... ராமாயண கதையை சித்தரிக்கும் படத்துடன் பிரதமர் மோடிக்கு பிரேசில் அதிபர் நன்றி

ந்தியா அனுப்பி வைத்த 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் பிரேசிலுக்கு போய்ச் சேர்ந்ததை அடுத்து அந்நாட்டு அதிபர் ராமாயண கதையை சித்தரிக்கும் படத்துடன் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

ராமாயணப் போரில் காயம் அடைந்த லட்சுமணனின் உயிரைக் காப்பாற்ற அனுமன் சஞ்சீவி மலையையே தூக்கி வந்தார். அதை குறிப்பிடும் வகையில், கொரோனா தடுப்பூசிகள், தடுப்பு மருந்து அடங்கிய குப்பிகள் ஆகியவை கொண்ட மலையை இந்தியாவில் இருந்து பிரேசிலுக்கு அனுமன் தூக்கிச் செல்வதுபோல் பிரேசில் அதிபர் சமூகவலைதளத்தில் பதிவிட்ட படம் அமைந்திருந்தது.

அத்துடன் இந்தியா போன்ற ஒரு கூட்டாளியை பெற்றதை பெருமையாக கருதுகிறோம் என்றும், தடுப்பூசி ஏற்றுமதி செய்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments